யோகா :
யோகா என்றால் எண்ணம் , சொல், செயல் ஒழுக்கம். யோகம் மூன்று வகைப்படும். அவை
௧.கர்ம யோகம் ௨.பக்தி யோகம் ௩.ஞான யோகம் (ராஜ யோகம்)
கர்ம யோகம் :
நம்முடைய பணிகளை ஒழுங்காக தக்க நேரத்தில் முழுமையாக செய்து முடிப்பது.
பக்தி யோகம் :
நம்முடைய பணிகளுக்கு இடையில் உலகத்தை படைத்த பரம்பொருளை நினைத்து நம்முடைய சேவைகளை ஏழைஎளிய மக்களுக்கு புரியும் விதத்தில் பகவத் கைங்கரியங்களை உதவி செய்யும் வகையில் அன்ன தானம், ஆடை தானம் செய்து, அருகில் இருக்கும் கோவில்களுக்கும் சென்று உழவாரப்பணிகளையும் மேற்கொண்டு நமது அன்பை ஆன்மீக சேவையாக வெளிப்படுத்தி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது.
ஞான யோகம் (ராஜ யோகம்):
எட்டு நிலைகளைக் கொண்ட யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி நரை, திரை, மூப்பு, பிணி இணர்ப் பன்னெடுங்காலம் உயிர் வாழ்வது